நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் இன்று (19.09.2026) ஆம் திகதி காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
லிந்துலை, தங்கக்கலை, கேம்பிரி தோட்டத்தைச் சேர்ந்த திவ்யா உமாச்சந்திரன் என்ற இளம் பெண்ணே இவ்விபத்தில் உயிரிழந்தவராவார்.
இன்று காலை லிந்துலை தங்கக்கலை தோட்டத்தில் இருந்து நுவரெலியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
எதிரே அதிவேகமாக வந்த வேன் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.