அம்பாறை மாவடிப்பள்ளி ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு!

​அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று (13.09.2026) ஆம் திகதி கரையொதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

​சடலம் கரையொதுங்கியுள்ளமை தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காரைதீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

​உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பிலும் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
​சடலம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளை காரைதீவு பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை