மட்டக்களப்பு மாவட்டம் கிரான்குளத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மஹாவிஷ்ணு ஆலய பஞ்சகுண்டபட்ச புனராவர்த்தன அஷ்டபந்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகப் பெருவிழா வரும் (09.09.2026)ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது.
இப்பெருவிழா (07.09.2026)ஆம் திகதி திங்கட்கிழமை (கருமாரம்பம்) காலை 06.15 மணிக்கு கணபதி ஹோமம், தீர்த்த சங்கிரஹணத்துடன் தொடங்கி, மாலை முதற்கால யாகபூஜை நடைபெறவுள்ளது.
தொடர்ந்து (08.09.2026)ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகபூஜைகள் இடம்பெறும்.
அன்று காலை 06.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை பக்தர்கள் பெருமானுக்கு எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இடம் பெறும்.
முக்கிய நிகழ்வான மஹா கும்பாபிஷேகம், (09.09.2026)ஆம் திகதி புதன்கிழமை காலை 08.39 மணி முதல் 10.32 மணி வரையான சுபயோக சுபமுஹூர்த்தத்தில் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.
தொடர்ந்து மஹா அபிஷேகமும் தீபாராதனையும் இடம்பெறும்.
இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 10 முதல் 20-ஆம் திகதி வரை தினசரி மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறவுள்ளதுடன், நிறைவு நாளான (20.09.2026)ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 1008 சங்காபிஷேகத்துடன் விழா நிறைவுபெறும்.