காட்டு யானை தாக்குதல் – வெளிநாட்டு சுற்றுலாப் பயணி படுகாயம்..!

அம்பாறை மாவட்டம் பொத்துவில் அருகம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன உல்லை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று (28.09.2026)ஆம் திகதி  இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த சுற்றுலாப் பயணி உடனடியாக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் அருகம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் காட்டு யானைகள் நடமாடும் பகுதிகளில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
புதியது பழையவை