யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்து, மட்டக்களப்பில் இன்று (28.09.2026) பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்டமை மற்றும் பொலிஸாரின் நடவடிக்கைகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த போராட்டக்காரர்கள், தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை அரசாங்கமும் பொலிஸாரும் உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறீநேசன், ஸ்ரீநாத் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள், மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கப் பிரதிநிதிகள், மதகுருமார்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் திரளானோர் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.