யாழ். வல்லை முனியப்பர் கோவில் அருகே உள்ள பாதசாரிக் கடவையில் இன்று (28.09.2026) ஆம் திகதி இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் ஆலையப் பூசகர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி, உடுப்பிட்டி கெருடாவில் பகுதியைச் சேர்ந்த கோயில் குருக்களே இச்சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.
இன்று வீதியில் வேகமாகப் பயணித்த ஆலய பூசகரின் மோட்டார் சைக்கிள், ஆலய வழிபாடுகளை முடித்துவிட்டு வீதியில் ஏறிய இளைஞர் ஒருவரின் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் நிலைதடுமாறி வீதியில் விழுந்த பூசகர், அவ்வழியாகப் பயணித்த மற்றொரு வாகனத்தின் சக்கரத்தில் சிக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.