மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாழடைந்த கிணறு விவகாரத்தில் சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
மயக்க மருந்து கொடுத்து பெண்களை கடத்தப்பட்டு தாலி உள்ளிட்ட தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு கொக்கட்டிச்சோலை வயல் பிரதேசத்தில் கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்து வந்த சம்பவம் தொடர்பாக கடந்த மார்ச் 21 ஆம் திகதி கைது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கணவன் மனைவி மற்றும் கணவனின் சகோரன் உட்பட 3 பேருக்கும் தொடர்ந்து எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் திங்கட்கிழமை உத்தரவிட்டார்.
கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து வவுணதீவு கொத்தியாவல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது இளம் தாய் ஒருவர் உயிருடனும் ஏற்கனவே காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு பெண் ஒருவர் சடலமாக கிணற்றில் இருந்து மற்றும் இளம் தாயின் 3 வயது 4 மாதம் கொண்ட சிறுமி வயல் பகுதியில் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இச் சம்பவம் தொடர்பாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தினவின் நேரடி கண்காணிப்பில் கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் அதிரடி விசாரணை முன்னெடுத்ததுடன் சந்தேக நபர்களையும் கைது செய்திருந்தனர்.
குறித்த வழக்கு விசாரணைக்காக கடந்த 28 திங்கட்கிழமை திறந்த நீமிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து நீதவான்3 பேரையும் வழக்கை எதிர்வரும் 13ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டு நீதவான் வழக்கை ஒத்திவைத்தார்.