போட்டிப் பந்தயத்தில் ஈடுபட்டு கோழி இறைச்சிக் கடையை மோதித் தள்ளிய பேருந்துகள்.!

​மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில், களுதாவளை பகுதியில் இன்று (30.09.2026) காலை இடம்பெற்ற கோர விபத்தில் கோழி இறைச்சி விற்பனை நிலையம் ஒன்று முற்றுமுழுதாகச் சேதமடைந்துள்ளது.

​திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான (அரசு) பேருந்தும், தனியார் பேருந்தும் ஒன்றை ஒன்று முந்திச் செல்லப் போட்டியிட்டவாறு அதிவேகமாக வந்துள்ளன. 

களுதாவளை வீதியில் வைத்து இவ்விரு பேருந்துகளும் முன்னும் பின்னுமாக முட்டி மோதி விபத்துக்குள்ளாகின.

​இவ்விபத்தின் போது கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, வீதியை விட்டு விலகி அருகில் இருந்த கோழி இறைச்சிக் கடைக்குள் புகுந்தது. 

இதில் அந்த இறைச்சிக் கடை முற்றுமுழுதாகச் சேதமடைந்து தரைமட்டமாகியுள்ளதுடன், விபத்தில் சிக்கிய இரண்டு பேருந்துகளும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

​சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த களுவாஞ்சிகுடி பொலிஸார் விரைந்து வந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை