கோட்டைக்கல்லாறு கல்முந்தல் திருவள்ளுவர் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு!

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு கல்முந்தல் திருவள்ளுவர் வித்தியாலயத்தில், அண்மையில் வெளியான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் சிறப்பு நிகழ்வு இன்று(14.09.2026)ஆம் திகதி பாடசாலையில் நடைபெற்றது.

​பாடசாலையின் முதல்வர் திருமதி சிறிப்பிரியா வேழவேந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பரீட்சையில் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி பாடசாலைக்குப் பெருமை சேர்த்த ஆறு மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

​இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி முதல்வர் ஏ. அரசரெத்தினம், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் ஆர். சுவர்ணராஜா உட்பட பலரும் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர்.

​மேலும், இச்சிறப்பு நிகழ்வின் போது பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில், களுவாஞ்சிக்குடி ஏ.கே.எஸ். உரிமையாளரினால் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை