அம்பாறை - ஆலையடிவைம்பு பிரதேச சபையின் “உள்ளூராட்சி வாரம் – 2026” நிகழ்வு ஆரம்பம்.!

அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேசசபையினால்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “உள்ளூராட்சி வாரம் – 2026” நிகழ்வின் கீழ் நடைபெறவுள்ள “நடமாடும் சேவை மற்றும் வருமான மேம்பாட்டு நாள்” நிகழ்வுகள் இன்று (14.09.2026)ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டன.

ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தவிசாளர் ஆர்.தர்மதாச தலைமையில்,மா.ராமக்குட்டி  ஆலையடிவேம்பு பிரதேசசெயலக  உதவிப் பிரதேசசெயலாளரின்  பங்கேற்புடன் எஸ். திவாகரன் பிரதேசசபை செயலாளரினால்  நிகழ்வுகள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

“வளமான நாடு அழகான வாழ்வு  –புத்துயிர்க்கும் புதுநகரம்  ஒரே இடத்தில் பல சேவைகள்” என்ற தொனிப்பொருளில் காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை  இடம்பெறும் இந்நிகழ்வின் ஊடாக பொதுமக்களுக்கு பல்வேறு உள்ளூராட்சி சேவைகளை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சிறுவர்
மற்றும் மகளீர் தொடர்பான சேவைகள்,தேசிய அடையாள அட்டை பிரிவு,காணி தொடர்பான சேவைகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவு ,சமூகசேவை பிரிவு உள்ளிட்ட பிரதேச செயலக. சேவைகளும்,
பொலிஸ் நிலையம் தொடர்பான சேவைகள்,
கால்நடை வைத்திய அலுவலகம் தொடர்பான சேவைகள்,
பொதுச் சுகாதாரம் தொடர்பான சேவைகள்,
ஆயுள்வேத வைத்திய சேவைகள் பிரதேசசபைக்கான சேவைகள் அத்துடன் 
பொதுமக்கள் முறைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இந்நிகழ்வில் வழங்கப்படுகின்றன.

பொதுமக்களை நேரடியாக அணுகி அவர்களின் தேவைகளை கேட்டறிந்து சேவைகளை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில், பிரதேச சபை, பிரதேச செயலகம், பொலிஸ், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ,கால்நடகாரியாலயம்,ஆயுர்வேத திணைக்களம் உள்ளிட்ட திணைக்களங்கள்  கலந்து கொண்டுள்ளன. 

அத்துடன் 
மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்குதல்
மரக்கன்றுகள் வழங்குதல்
கலாசார பொதிகள்  பரிசில்கள் வழங்குதல் நிகழ்வுகளும்  இடம்பெற்றன.

இந்த தொடக்க நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்  உப தவிசாளர் க.ரகுபதி,பரிமளவாணி சில்வஸ்டர்.உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள் ,உத்தியோகத்தர்கள்,பிரதேசசபை உறுப்பினர்கள், சபை உத்தியோகத்தர்கள்   கலந்துகொண்டனர்.

புதியது பழையவை