துப்பாக்கிமுனையில் கொள்ளை - திருகோணமலை அனுராதபுர சந்தி மதுபானக் கடையில் அதிர்ச்சி – CCTV காட்சிகள் வெளியீடு!

​திருகோணமலை - அனுராதபுர சந்தி பகுதியில் அமைந்துள்ள பிரபல மதுபானக் கடை ஒன்றில் நேற்றிரவு துப்பாக்கிமுனையில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

​நேற்றிரவு மதுபானக் கடைக் கதவின் பூட்டை உடைத்து அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ரொக்கப் பணம் மற்றும் விலையுயர்ந்த மதுபானப் பாட்டில்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

​இச்சம்பவம் குறித்த அனைத்துக் காட்சிகளுமே கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளன. 

திருடர்களின் உருவமும், அவர்கள் கொள்ளையில் ஈடுபடும் பதறவைக்கும் காட்சிகளும் தெளிவுறப் பதிவாகியுள்ள நிலையில், இக்காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

​இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், உப்புவெளி (Uppuveli) காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இதில் ஈடுபட்ட நபர்களை விரைந்து அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஈடடுபட்டுள்ளன.
புதியது பழையவை