3 வாகனங்கள் மோதி விபத்து- அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயமில்லை

​திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டான்குளம் பகுதியில் இன்று புதன்கிழமை (07.10.2026)ஆம் திகதி  காலை மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

​சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு சொந்தமான பேருந்து, வேன் மற்றும் முச்சக்கர வண்டி ஆகிய வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில் இவ் விபத்து சம்பவித்துள்ளது.

​எனினும், இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயங்கள் எதுவுமின்றி உயிர் தப்பியுள்ளனர்.
​இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை