அக்கரைப்பற்றில் காணாமல் போன 44 வயதுடையவர்! பொதுமக்களின் உதவி கோரல்.!

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் இருந்து அம்பாறைக்குச் சென்ற 44 வயதுடைய கோகுலராஜன் என்பவரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

அவரைக் கண்டுபிடிப்பதற்குப் பொதுமக்களின் உதவி அவசரமாகக் கோரப்பட்டுள்ளது.

நேற்று  (25.10.2026)ஆம் திகதி காலை 11.30 மணியளவில், தனது தாயுடன் அக்கரைப்பற்றில் இருந்து கல்முனைக்குப் பொருளொன்றைக் கொள்வனவு செய்வதற்காக கோகுலராஜன் சென்றுள்ளார்.

எனினும், குறித்த பொருள் கல்முனையில் கிடைக்காததால், அம்பாறைக்குச் சென்று அதனைக் கொள்வனவு செய்துவிட்டு வீடு திரும்புவதாகத் தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, NXG Splendor ரக மோட்டார் சைக்கிள் (இலக்கம்: VM 4706) மூலம் அம்பாறைக்குச் சென்ற அவர், இதுவரை வீடு திரும்பவில்லை எனக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், காணாமல் போன கோகுலராஜனைக் கண்டுபிடிப்பதற்கான தேடல் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், அக்கரைப்பற்று, கல்முனை, அம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் அவசர உதவி கோரல்!

காணாமல் போன கோகுலராஜனைக் கண்டவர்கள் அல்லது அவர் தொடர்பான ஏதேனும் தகவல்களை அறிந்தவர்கள், 075 581 8537 என்ற தொலைபேசி இலக்கத்துடன் உடனடியாகத் தொடர்புகொண்டு தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலும், இச்செய்தியைச் சமூக வலைத்தளங்கள், WhatsApp குழுக்கள் உள்ளிட்ட தொடர்பாடல் தளங்களில் பகிர்ந்து, காணாமல் போனவரைக் கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு சிறிய தகவல்கூட அவரைக் கண்டுபிடிப்பதற்கு உதவியாக அமையலாம். எனவே, பொதுமக்கள் அனைவரும் இச்செய்தியைப் பகிர்ந்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

புதியது பழையவை