ஹல்துமுல்ல சொரகுனே தபால்நிலையத்தின் கீழ் கடமையாற்றும் தபால்காரர் ஒருவரே இந்தத் தவறை இழைத்துள்ளார்.
குறித்த நபர் சொரகுனே பகுதிக்கு கடிதங்கள், ஆவணங்களை விநியோகிக்க வேண்டிய கடமை நேரத்தில் கள்ளச்சாராயம் குடித்துக்கொண்டிருப்பதாக ஹல்துமுல்ல பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து குறித்த நபரின் வீட்டை பொலிஸார் சோதனையிட்ட போது பெருந்தொகை கடிதங்கள் அடங்கிய பையொன்று கிடைத்துள்ளது.
அதில் 2065 சாதாரண தபால்களும் 17 பதிவுத் தபால்களும் இருந்துள்ளதுடன் அவை 2021 ஆம் ஆண்டு முதல் உரிமையாளர்களுக்கு விநியோகிக்கப்படாதவை என தெரியவந்துள்ளது.
அரச இலச்சினையுடனான கடிதங்கள், வங்கி கடிதங்கள், நீதிமன்ற கடிதங்கள், நேர்முகப்பரீட்சைக்கான கடிதங்கள் உள்ளிட்ட ஆவணங்களே இவ்வாறு விநியோகிக்கப்படாதிருந்துள்ளன.
குறித்த தபால்களுடன் ஹல்துமுல்லை பகுதியைச் சேர்ந்த 42 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று(21.10.2026) பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து சந்தேகநபர் 200,000 ரூபாய் சரீரப் பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.