மின்சாரம் தாக்கி மின்சார சபை ஊழியர் உயிரிழப்பு.!இருவர் பலத்த காயம்!

கடவத்தை - மன்கட வீதி பகுதியில் மின்சார கம்பமொன்றை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மின்சார சபை ஊழியர்கள் மின்சாரம் தாக்கி விபத்துக்குள்ளானதில், ஒரு ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர்.

​நேற்று (02.10.2026) ஆம் திகதி நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

​உயர் அழுத்த மின்சார விநியோகத்தை துண்டிக்காமல், மின் கம்பத்தைச் சீரமைக்க முயன்ற போதே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. 

இதன்போது பணியில் ஈடுபட்டிருந்த நான்கு ஊழியர்கள் மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

​விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த ஏனைய இரு ஊழியர்களும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

​சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை