யாழ்ப்பாணம், தென்மராட்சி – மீசாலை புத்தூர்ச் சந்திப் பகுதியில் இன்று (06.10.2026) இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் 36 வயதான பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றி வந்த சோபிதா (வயது 36) என்பவரே இவ்விபத்தில் பலியானவராவார்.
உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் குறித்த வீதி வழியாகப் பயணித்துக் கொண்டிருந்த வேளையிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.