ஆசிரியர் தினத்தில் சோகம் - மட்டக்களப்பில் மணல் டிப்பர் மோதி ஆசிரியை பரிதாப உயிரீழப்பு.!

ஆசிரியர் தினமான இன்று (06.10.2026) பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆசிரியை ஒருவர் மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

​இவ்விபத்து மட்டக்களப்பு புதூர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
​விபத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு, சூரியா லேனைச் சேர்ந்த 58 வயதான திருமதி மதிவதனி கமலநாதன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

​30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரிய சேவையில் ஈடுபட்டு வந்த இவர், தற்போது மட்/ வலையிறவு மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார்.

​இன்று ஆசிரியர் தினத்தைக் கொண்டாடிவிட்டு, பாடசாலை முடிந்ததும் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

​இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை