கொழும்பிலிருந்து மன்னார் சென்ற பேருந்து விபத்து - யாழ். பல்கலைக்கழக மாணவி உட்பட இருவர் உயிரிழப்பு!

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கிப் பயணித்த தனியார் சொகுசுப் பேருந்து விபத்துக்குள்ளானதில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து, கொழும்பு–புத்தளம் பிரதான வீதியில் சாலியவெவ, 19ஆம் கட்டைப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை (22.10.2026) மாலை இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 30 வயதுடைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அநுராதபுரம், ரம்பேவ பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகப் பீடத்தில் கல்வி பயின்று வந்துள்ளார்.

இவ்விபத்துச் சம்பவம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், விபத்து இடம்பெற்றமைக்கான காரணம் மற்றும் மேலதிக விபரங்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

#
புதியது பழையவை