மட்டக்களப்பு நாவலடி கடல்நாச்சி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக இன்று(29.10.202) ஆம் திகதி சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த நபரைத் தெரிந்தவர்கள் அல்லது அவரது குடும்பத்தினருக்கு அவரை அடையாளம் காண உதவக்கூடிய தகவல்கள் தெரிந்தவர்கள், இந்தத் தகவலைப் பகிர்ந்து உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரை அடையாளம் காண உதவும் வகையில் இச்செய்தியைப் பகிர்ந்து உதவுங்கள்.