யாழ்ப்பாணத்தில் கோர விபத்து.! இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு.!

​யாழ்ப்பாணம் – கைதடி சந்தைப் பகுதிக்கு அருகில் இன்று (13.10.2026) ஆம் திகதி இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

​கைதடி சந்தைப் பகுதிக்கு அருகில் இன்று இடம்பெற்ற இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்துக்கான காரணம் மற்றும் மோதிக்கொண்ட வாகனங்கள் குறித்த விவரங்கள் இதுவரை முழுமையாக வெளிவரவில்லை.

​சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் விபத்து தொடர்பான தொடர் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை