கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா- ஆலையடிவேம்பு கோட்ட பிரதி அதிபர், ஆசிரியர்களுக்கு கல்வி முதுமாணி பட்டம்.!

​இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று(03.10.2026)ஆம் திகதி  கோலாகலமாக நடைபெற்றது. 

இதில் திருக்கோவில் கல்வி வலயத்தின் ஆலையடிவேம்பு கல்விக் கோட்டத்தில் கடமையாற்றும் பிரதி அதிபர் ஒருவர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் கல்வி முதுமாணி (Master of Education) பட்டத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

​ஆலையடிவேம்பு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலையில் பிரதி அதிபராகக் கடமையாற்றும் திரு. இரத்தினசிங்கம் சுதர்ஷன், ஆசிரியர்களான திருமதி சரனியா சுரேஸ்குமார் மற்றும் திருமதி நிலோஜினி தயாகரன் ஆகியோரே இவ்வாறு கல்வி முதுமாணி பட்டத்தைப் பெற்றுக்கொண்டவர்களாவர்.

​கல்வித்துறையில் தங்களது பணிகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வரும் அதேவேளையில், உயர்கல்வியைத் தொடர இவர்கள் மேற்கொண்ட தொடர் முயற்சியின் பயனாகவே இச்சாதனையைப் பெற்றுள்ளனர்.

​கல்வித் துறையில் சிறப்புச் சாதனை புரிந்துள்ள இவர்களுக்கு சக அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் தமது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
புதியது பழையவை