திருகோணமலைக்குத் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டிருந்த பிரபல இந்தியப் பின்னணிப் பாடகர் மனோ, தனது குடும்பத்தினருடன் நேற்று (03.10.2026) ஆம் திகதி மாலை வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோணேஸ்வர ஆலயத்திற்குச் சென்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார்.
'ஆர்.ஐ என்டர்டெய்ன்மென்ட்' நிறுவனத்தின் பணிப்பாளர் ஆஷாத்தின் ஏற்பாட்டில் அமைந்த இவ்விஜயத்தின் போது, திருகோணமலை மாவட்ட கலாசார திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட பூசை நிகழ்வுகளில் பாடகர் மனோ கலந்துகொண்டார்.
தொடர்ந்து ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அவர், விரைவில் நடைபெறவுள்ள திருக்கோணேஸ்வர ஆலயத்தின் கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு, ஆலயத்திற்காக விசேட பாடல் ஒன்றை இலவசமாகப் பாடித் தருவதாகவும் மகிழ்ச்சியுடன் வாக்குறுதி அளித்துள்ளார்.