பிரபல இசையமைப்பாளர் 'தேனிசை தென்றல்' தேவா காலமானார்!

தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும் பாடகருமான 'தேனிசை தென்றல்' தேவா காலமானார். 

மாரடைப்பு காரணமாக இன்று (17.10.2026)ஆம் திகதி  காலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி காலை சுமார் 8:30 மணியளவில் திடீரென காலமானதாகத் தகவலள் வெளியாகியுள்ளன.

அவரது மறைவு தென்னிந்தியத் திரையுலகினர் மற்றும் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

​சாதனைகளும் திரையுலகப் பயணமும்.

​36 ஆண்டுகால நீண்ட இசைப் பயணத்தைக் கொண்ட தேவா, தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களுக்குச் சிறப்பான பாடல்களையும், பின்னணி இசையையும் வழங்கியுள்ளார். 

இவர் 400 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துத் திரையுலகில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ளார்.

​ஈழத்துத் திரைப்படத்தில் பங்களிப்பு.

​மறைந்த இசையமைப்பாளர் தேவா, ஈழத்துத் தமிழ் திரைப்படமான 'போராட்டம்' படத்திலும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.

பாஸ்கரன் கந்தையாவின் தயாரிப்பில், ராஜ் சிவராஜ் இயக்கத்தில், பூவன் மதீசனின் இசையமைப்பில் உருவான இப்படத்தில் அவர் அண்மையில் பாடல் ஒன்றைப் பாடியிருந்தார்.

குறிப்பாக, இப்படத்தில் இடம்பெற்ற "சோறு தான் முக்கியம்" என்ற பாடல் அவரது தனித்துவமான குரலில் அண்மையில் வெளியாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை