இலங்கையின் பல பகுதிகளில் திடீர் மின் தடை!

நாட்டின் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று (17.10.2026)ஆம் திகதி  திடீர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.  

​இந்த மின்சாரத் தடை தொடர்பில் இலங்கை மின்சார சபையோ அல்லது உரிய அதிகாரிகளோ எவ்வித முன்கூட்டிய அறிவிப்புகளையும் வழங்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 

திடீரென ஏற்பட்ட இந்த மின்வெட்டு காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் வழமையான இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.  

​மின்சாரத் தடைக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை. 

இது தொடர்பான மேலதிகத் தகவல்கள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன.
புதியது பழையவை