மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு - ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் சிகிச்சைக்கு அதிக வாய்ப்பு!

உலகளவில் பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய்களில் ஒன்றான மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒக்டோபர் மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சில நாடுகளில் ஒக்டோபர் 19ஆம் திகதி மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.

மார்பகத்தில் கட்டி ஏற்படுதல், அதன் வடிவத்தில் மாற்றம், தோலில் மாற்றங்கள் அல்லது முலைக்காம்பிலிருந்து அசாதாரண திரவம் வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை பெறுவதன் மூலம் குணமடைவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க முடியும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

மார்பகப் புற்றுநோய் பெண்களை அதிகம் பாதித்தாலும், ஆண்களுக்கும் ஏற்படலாம்.

வயது மற்றும் தனிப்பட்ட ஆபத்துக் காரணிகளுக்கு ஏற்ப மருத்துவ ஆலோசனையுடன் தேவையான பரிசோதனைகளை மேற்கொள்வது முக்கியமாகும்.

விழிப்புணர்வு உயிர்களைக் காக்கும்! அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்.
புதியது பழையவை