யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அரங்கேறிய நிகழ்வு, அங்கிருந்த ஆயிரக்கணக்கான கண்களைக் கண்ணீரில் மூழ்கடித்தது.
பல ஆண்டுகள் தூங்காமல் விழித்திருந்து, புத்தகங்களோடு போராடி, "அம்மா... நான் பட்டம் வாங்கிட்டேன்!" என்று மேடையில் ஏறி பெருமையோடு கூப்பிட வேண்டிய ஒரு மகள், இன்று அந்த மேடையிலும் இல்லை இந்த உலகத்திலும் இல்லாமல் போன சம்பவத்தால் அன்றைய தினம் ஆயிரக்கணக்கான கண்களில் கண்ணீர் மழை பொழிந்தது.
யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப்பீட இசைத்துறை மாணவியான நிரோஷினி (27), தனது படிப்பை வெற்றிகரமாக முடித்து பட்டமளிப்பு விழாவிற்காகக் காத்திருந்த தருணத்தில், 'புற்றுநோய்' எனும் கொடூர அரக்கன் அவரது உயிரைப் பறித்து விட்டது.
பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், சக மாணவர்கள் தங்கள் கைகளில் பட்டங்களைப் பெற்று மகிழ்ந்தனர். ஆனால், நிரோஷினியின் இருக்கை மட்டும் காலியாகக் கிடந்தது.
"இந்த மேடையில் எங்களோடு சேர்ந்து கைதட்டிச் சிரிக்க வேண்டிய எங்கள் தோழி இன்று மண்ணோடு மண்ணாகிவிட்டாளே..." என சக மாணவ-மாணவிகளும் பேராசிரியர்களும் கதறி அழுத காட்சி காண்போரின் நெஞ்சைப் பிளப்பதாக இருந்தது.
பட்டம் பெற வேண்டிய கைகளில் மலர் வளையம்... கனவுகள் சுமந்த விழிகளில் மரண அமைதி! கல்விப் பயணத்தின் இறுதி இலக்கை அடைந்தும், அந்த வெற்றியைக் கொண்டாட முடியாமல் காலனின் கைக்குச் சென்ற நிரோஷினியின் இந்த சோகக் கதை, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரது இதயங்களையும் கனக்கச் செய்து வருகிறன.
ஆயிரம் கனவுகளோடு விடைபெற்ற அந்த இசைத் தேவான்மாவுக்குக் கண்ணீர் அஞ்சலிகள்!