பயங்கரவாதத்தில் இருந்து அரசைப்பாதுகாக்கும் புதிய சட்டத்திற்கு எதிராக சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி கே வி தவராசா அவர்களின் கௌரி சங்கரி சட்ட நிறுவனத்தின் ஊடாக முதலாவது வழக்கு சட்டத்தரணி தர்மராஜா தர்மஜா நேற்று (08/10/2026) தாக்கல் செய்தார்.
இந்த வழக்கானது ஊடகவியலாளரான எம் பஷீர்,தரிந்து உடுவரகெதர ஆகியோர் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள கடந்த 1979, ல் மட்டக்களப்பு மாவட்ட கல்குடா தொகுதி ஐக்கிய தேசியகட்சி பாராளுமன்ற உறுப்பினரும், நீதி அமைச்சருமான கே டவிலியூ தேவநாயகம் அவர்களால் சமர்பிக்கப்பட்டு இன்று வரை 47, வருடங்களாக அமுலில் உள்ள அந்த கொடிய சட்டத்திற்கு மாற்றீடாகவே கடந்த 06/10/2026, செவ்வாய்கிழமை பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை பாதுகாக்கும் என்ற பெயருடன் புதிய சட்டம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் மிகவும் பாராதூரமான கொடுமையான சட்டம் என சட்ட ஆய்வாளர்கள் தெரிவிக்கும் நிலையில் அதனை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றில் ஜனாதிபதி கே வி தவராசா அவர்களுடைய கௌரி சங்கரி சட்ட நிறுவனம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.