தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்ரன் தோட்டத்தில் இன்று (03.10.2026)ஆம் திகதி மாலை இடம்பெற்ற மின்னல் தாக்குதலில் கிறிஸ்தவ மதகுரு ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சுமார் 50 வயதுடைய மதகுரு ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகிறது.
மின்னல் தாக்கத்திற்குள்ளான அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த போதிலும், உடனடியாக மீட்கப்பட்டு லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்.
தற்போது அவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.