புகையிரத பாதையில் மண்மேடு சரிவு;பேராதனை- கொழும்பு கடுகதிபுகையிரதம் தடம் புரள்வு!

பேராதனைச் சந்தியிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதம் புகையிரத பாதையில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததால் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (05.10.2026)அதிகாலை 4.40 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கங்கொட மற்றும் கடிகமுவ புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் புகையிரதம் பயணித்துக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தொடர்ச்சியான மழை காரணமாக புகையிரத பாதையில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து வீழ்ந்தமையே புகையிரதம் தடம் புரளக் காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை