திருகோணமலை மாவட்ட பௌத்த விகாரைகளின் பூமி உறுதிப் பத்திரங்கள் தொடர்பான கலந்துரையாடல்!

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பௌத்த விகாரைகளுக்கான பூஜாபூமி உறுதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட சாசனாரக்ஷக பல மண்டலத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய அக்போபுர விமலஞான தேரர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், பிரதேச செயலாளர் மட்டத்திலோ அல்லது மாகாண காணி ஆணையாளர் மட்டத்திலோ தீர்க்கக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அவ்வாறு தீர்க்க முடியாத பிரச்சினைகள் இருப்பின், காணி ஆணையாளர் நாயகம் மட்டத்திலாவது அவற்றைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார வலியுறுத்தினார்.

இதன்போது பதவிசிறிபுர, தம்பலகாமம், கந்தளாய், சேருவில, மூதூர், மொரவெவ, நகரமும் கடவத்தையும், குச்சவெளி, வெருகல் மற்றும் கோமரங்கடவல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமைந்துள்ள விகாரைகளின் பூஜாபூமி உறுதிப் பத்திரங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள், பௌத்த விவகார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
புதியது பழையவை