கொழும்பு அலரிமாளிகையில் இன்று (08.10.2026) இம் திகதி ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசேட நிகழ்வில், 1,540 புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த புதிய கிராம உத்தியோகத்தர்கள் தமது நியமனங்களைப் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் மாகாண ஆளுநர்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் உள்ளிட்ட பிரதி அமைச்சர்கள், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.