மாமனிதர் ரவிராஜ் அவர்களின் 20,ம் ஆண்டு நினைவு.!

யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி மற்றும் யாழ் பரி யோவான் கல்லூரிகளில் கல்வி கற்றார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் 1987 ஆம் ஆண்டு இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பதிவு செய்தார். ரவிராஜின் "ரவிராஜ் அசோசியேட்ஸ்" எனும் சட்ட நிறுவனமானது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகள், அவசரகாலச் சட்டத்தின் கீழான வழக்குகளுக்காக வாதாடியது. கொழும்பில் மனித உரிமைகள் சட்டத்தரணியாகவும் பணியாற்றினார்.

ரவிராஜ் சட்டத்தரணியாக இருந்து அரசியலில் நுழைந்தார். 1984 முதல் 1990 வரையிலும் 1993 முதல் 1997 வரையிலும் மனித உரிமைகள் இல்லத்தை நடத்தினார். 1987 இல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் இணைந்தார். 1990 ஆம் ஆண்டு அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரானார்.
1997 ஆம் ஆண்டு யாழ். மாநகரசபை பிரதி முதல்வராகவும், 1998 இல் யாழ். மாநகரசபை முதல்வராகவும் தெரிவானார்.
2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தென்மராட்சி பகுதியில் போட்டியிட்டு இருமுறையும் வெற்றி பெற்றார்.

2006,நவம்பர்,08, ல் மட்டக்களப்பு மாவட்டம் வாகரையில் இலங்கை இராணுவம் மேற்கொண்ட எறிகணை, விமானக்குண்டு தாக்குல்களால் சுமார் 65, பேர் கொல்லப்பட்டும் நூற்றுக்கணக்கானவர்கள் காயப்பட்டும் உள்ளனர்.

இந்த தாக்குதலை எதிர்த்து 2006,நவம்பர்,09, வியாழக்கிழமை  கொழும்பு 07, ஐக்கிய நாடுகள் சபையின்  அலுவலகம் முன் அப்போது தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த 22, பேரும் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம்.

இந்த ஏற்பாட்டை செய்தவர் மாமனிதர் ரவிராஜ். அடுத்த நாள் மட்டக்களப்பு வாகரைக்கு நானும் அவரும் செல்வதற்காக இருந்தோம்.

அடுத்தநாள்தான் இந்த துயரம் நடந்தது..!

2006 நவம்பர் 10 வெள்ளிக்கிழமை அன்று காலை 07, மணிக்கு ரவிராஜ் தெரன தொலைக்காட்சியில் நடந்த ஒரு நேரடி நேர்காணல் ஒன்றில் பங்குபற்றிவிட்டு வீடு திரும்பி பின்னர் மீண்டும் வீட்டை விட்டு தனது வாகனத்தில் வெளியேறிய போது காலை 8:45 மணியளவில் கொழும்பு நாரகேன்பிட்டிய மனிங்டவுனில் உள்ள அவரது வீட்டுக்கருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இரண்டு ஆயுத ஒட்டுக்குழு  அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

என்னை மாதிவெல பாராளுமன்ற விடுதியில் ஏற்றிக்கொண்டு மட்டக்களப்பு வாகரைக்கு செல்லவே அவர் வந்திருப்பார் அப்போதுதான் கொலையாளிகளால் சுடப்பட்டார்.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிராஜ் சிகிச்சை பலனின்றி காலை 9.20 மணிக்கு உயிரிழந்தார். ரவிராஜின் மெய்ப்பாதுகாவலரும் காவல்துறையினருமான லக்சுமன் லொக்குவெல்ல என்பவரும் இதன்போது கொல்லப்பட்டார்.

மாதிவெல பாராளுமன்ற விடுதியில் இருந்த நாங்கள் உடனே கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்று பார்த்தோம்.

துணிச்சல், ஆளுமை, தமிழ்த்தேசியபற்று, சட்ட நுணுக்கம், கொண்ட ஒரு மாமனிதர் ரவிராஜ அவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

இன்று அவர் உயிர் நீத்து 20, ஆண்டு நினைவாகும் இதுவரை அவரை கொலைசெய்தவர்கள் கைது செய்யப்பட்டு நீதி வழங்கப்படவில்லை என்பதே உண்மை.

-பா.அரியநேத்திரன்-
10/11/2026
புதியது பழையவை