அநுராதபுரம், ரம்பேவ பகுதியில் A9 வீதியில் இன்று (10.11.2026) ஆம் திகதி காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
இரண்டு இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (SLTB) சொந்தமான பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதைத் தொடர்ந்து, பின்னால் வந்த தனியார் பேருந்தும் அவற்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அநுராதபுரம், வவுனியா மற்றும் மெதவச்சிய வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் இரண்டு பொலிஸ் குழுக்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.