2008ஆம் ஆண்டு ஏறாவூரைச் சேர்ந்த தேவதாஸ் சுரேஷ்குமார் என்பவரைக் கடத்திச் சென்று கொலை செய்ததுடன், குற்றத்திற்கான தடயங்களை மறைக்க முயன்ற வழக்கில், ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் எனக் குறிப்பிடப்படும் 8 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று (19.11.2026) தீர்ப்பளித்துள்ளது.
மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
குறித்த வழக்கில் 9ஆவது பிரதிவாதி விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய 8 பிரதிவாதிகளுக்கும் உச்சபட்ச தண்டனையான தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பைத் தொடர்ந்து, தண்டனை பெற்ற எட்டு பேரும் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சுமார் 18 ஆண்டுகளாக விசாரணையில் இருந்த இந்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.