காலி மீன்பிடித் துறைமுகத்தில் பாரிய தீ விபத்து – ஏழுக்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் சேதம்!

இலங்கையின் காலி மீன்பிடித் துறைமுகத்தில் நேற்று (08.11.2026) மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகுகளில் திடீரென தீ பரவியதில், ஏழுக்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் தீக்கிரையாகி சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து, தீயணைப்புப் படையினரும் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இத்தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. அத்துடன், உயிரிழப்புகள் அல்லது காயமடைந்தவர்கள் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

தீ விபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

மேலதிக தகவல்கள் கிடைக்கும்போது தொடர்ந்து அறியத் தருகிறோம்.
புதியது பழையவை