மஹாஓயா ஆதார வைத்தியசாலை மூன்றாம் இடம் - தேசிய உற்பத்தித்திறன் போட்டி விருதை வென்றது.!

தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற அரச திணைக்களங்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பங்குபற்றுதலுடன் (08.11.2026) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி தினத்தன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, பொதுத்துறைப் பிரிவில் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்ற மஹாஓயா ஆதார வைத்தியசாலைக்கு தேசிய விருது வழங்கி வைக்கப்பட்டது.

இந்தச் சாதனையைப் பெற்றுக்கொள்வதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளில் முன்னின்று செயற்பட்ட வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் Dr. Chamil Wijakoon  மற்றும் தொடர்ச்சியான வழிகாட்டல்களை வழங்கிய அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. Nishshanga Wijewardhana  ஆகியோர் அயராது பாடுபட்டதுடன் 
தற்போதைய வைத்திய அத்தியட்சகர் Dr.T.kunalini  தலைமையில் துப்புரவுப் பணியாளர்கள், பாதுகாப்புப் பிரிவினர், பராமரிப்புப் பிரிவினர், உதவிப் பணியாளர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் துணை மருத்துவ உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினரும் ஒரே குடும்பமாக ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டமையே இந்த வெற்றிக்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெற்றி வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்திக்கும் சேவை மேம்பாட்டுக்கும் பெரும் உந்துசக்தியாக அமைவதுடன் எதிர்வரும் ஆண்டுகளில் இதைவிட உயர்ந்த சாதனைகளைப் பெற்று மக்களுக்கான தரமான சுகாதார சேவையை வழங்குவதிலும் சிறப்பாக செயற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
புதியது பழையவை