தமிழ்த் தேசியப் பற்றாளரும், இலங்கையின் மூத்த தமிழ் அரசியல் தலைவருமான மறைந்த எம்.கே. சிவாஜிலிங்கத்தின் திருவுடலுக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துவதற்காக யாழ்ப்பாணம் வருகை தந்த தொல். திருமாவளவன், அவரது திருவுடலுக்கு மலர் மாலை அணிவித்து தனது மரியாதையைச் செலுத்தினார்.
மறைந்த சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியைகள் இன்று (16.11.2026) யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் நடைபெறவுள்ளன.
முதலில் அவரது இல்லத்தில் இறுதிச் சடங்குகள் இடம்பெற்று, பின்னர் பொதுமக்களின் அஞ்சலிக்காக பூதவுடல் வல்வெட்டித்துறை சந்தியில் வைக்கப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஊறணி இந்து மயானத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளன.