பாலாம்பிகா சமூகப்பணி அமைப்பினால் பேத்தாழை நாவையடி பிள்ளையார் ஆலயத்திற்கு நிதியுதவி வழங்கி வைப்பு!

மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பேத்தாழையில் சமூகப்பணிகளில் ஈடுபட்டு வரும் பாலாம்பிகா சமூகப்பணி அமைப்பினால், தனது ஓராண்டு நிறைவை முன்னிட்டு பேத்தாழை நாவையடி பிள்ளையார் ஆலயத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலயத் தலைவரின் வழிகாட்டல் மற்றும் நெறிப்படுத்தலில் இயங்கி வரும் பாலாம்பிகா சமூகப்பணி அமைப்பானது, சமூக நலனை முன்னிறுத்தி ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு சமய மற்றும் சமூகப் பணிகளை முன்னெடுத்து வருகின்றது.

குறிப்பாக, ஆலயங்களில் இடம்பெறும் சரியைத் தொண்டுகள், எண்ணெய்க்காப்பு நிகழ்வுகள் மற்றும் ஆலயத் திருப்பணிகளுக்குத் தேவையான நிதியுதவிகளை வழங்கி, தனது சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.

அந்தவகையில், அமைப்பின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு தீபாவளித் திருநாளான நேற்று (08.11.2026), ஆம் திகதி பேத்தாழை நாவையடி பிள்ளையார் ஆலயத்தின் திருப்பணிகள் மற்றும் தேவைகளுக்காக நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறுகிய காலத்தில் சமூகத்திற்கும் ஆலயங்களுக்கும் பயனுள்ள பணிகளை முன்னெடுத்து வரும் இவ்வமைப்பின் செயற்பாடுகள், ஏனைய சமூக அமைப்புகளுக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளன.

எதிர்காலத்திலும் இவ்வமைப்பு பல்வேறு சமூக மற்றும் சமயப் பணிகளைச் சிறப்பாக முன்னெடுத்து, மேலும் வளர்ச்சியடையவும், பாலீஸ்வரப் பெருமானின் திருவருள் என்றும் துணைநிற்கவும் ஆலயம் சார்பாகப் பிரார்த்தனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
புதியது பழையவை