மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச சபையின் இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய உறுப்பினராக திருமதி சுகிகரன் கோபிகா இன்று (16.11.2026) பதவியேற்றுக் கொண்டார்.
போரதீவுப்பற்று பிரதேச சபை உறுப்பினராகப் பதவி வகித்த தே.ஜேனுகா, தனது பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்குக் கட்சியின் தீர்மானத்திற்கு அமைவாக திருமதி சுகிகரன் கோபிகா புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய, போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வி. மதிமேனன் முன்னிலையில் இன்று அவர் தனது பதவியை ஏற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் பிரதேச சபையின் உப தவிசாளர் த. கயசீலன், செயலாளர் ச. விஜிதராஜா, பிரதேச சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் கிராமத்தின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.