கார்த்திகை 26 மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகத்தில் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களில் உணர்ச்சி பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் மட்டக்களப்பு கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்முறை பல்லாயிரக் கணக்கான மக்களின் பங்களிப்பில் மிக உணர்ச்சியுடனும், எழுச்சியுடனும் மாவீரர் தின நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (27.11.2026) இடம்பெற்றது.
தரவை மாவீரர் துயிலுமில்ல மாவீரர் தின ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட குறித்த நிகழ்வில் சரியாக 06.05 மணிக்கு மாவீரர் ரேணுகரனின் தாய் மலகாந்தி தீபத்தைக் கொடுக்க, மாவீரர்களான குமரன், அரணிதரன் ஆகியோரின் தந்தையான கணேசன் ஈகைத் தீபம் ஏற்றினார், அதனைத் தொடர்ந்து மாவீரரின் பெற்றோர்கள் இருவரினால் மலர்மாலை அணிவிக்கப்பட்டது.
இன் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.