மட்டக்களப்பு மாவட்டம், வவுணதீவு தாண்டியடி மைதானத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று (27.11.2026) உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
இதன்போது, பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடி, உணர்வுபூர்வமாகவும் கண்ணீர் மல்கவும் மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினர்.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், வவுணதீவு பிரதேச சபைத் தவிசாளர் கோபாலப்பிள்ளை, மாநகர சபை பிரதி முதல்வர் வை. தினேஸ்குமார், மண்முனை மேற்கு பிரதேச சபை உப தவிசாளர் டிசாந், மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் மண்முனை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, மாவீரர்களை நினைவுகூர்ந்து மக்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.