மட்டக்ககளப்பு வாழைச்சேனை விபுலானந்தர் வீதியைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் குறித்த ஸ்பா விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் நிலையில், அங்கிருந்த சிங்களப் பெண்கள் அவரைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பான காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருவதுடன், இச்சம்பவம் தொடர்பில் பல்வேறு கருத்துகளும் பகிரப்பட்டு வருகின்றன.
எனினும், சம்பவத்திற்கான உண்மையான பின்னணி, தாக்குதலுக்கான காரணம் மற்றும் பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.