மட்டக்களப்பில் தென்னம் தோட்டத்தை துவம்சம் செய்த காட்டு யானைக்கூட்டம்











தென்னம் தோட்டத்தைதுவம்சம் செய்த காட்டுயானைக்கூட்டம்.

மட்டக்களப்பு மாவட்டம்மண்முனை தென்மேற்குபிரதேசத்திற்குட்பட்ட மாவடிமுன்மாரி முதலைமடுவயற்கண்டத்தில் அமைந்துள்ள தென்னம்தோட்டத்தை புதன்கிழமை(10) இரவு காட்டுயானைக்கூட்டம் அழித்து துவம்சம் செய்துள்ளது.

தற்போது பெரும்போக நெல் அறுவடைக்காலமாகையால் காட்டு யானைகளின்தாக்குதல்களும்அழிவுகளும்மிகவும்வெகுவாகஅதிகரித்த வண்ணமுள்ள இந்நிலையில் புதன்கிழமைஇரவு அப்பகுதியில் சுமார் 10 இற்கு மேற்பட்ட காட்டுயானைகளைக் கொண்ட கூட்டம் உட்புகுந்துஅப்பகுதியில் அமைந்துள்ள நெல்வயல்களையும்அழித்துள்ளதோடுதென்னம் தோட்டம் ஒன்றையும்அழித்து துவம்சம் செய்துள்ளது.

நள்ளிரவில் காட்டுகள் வந்து தமது தென்னம்தோட்டத்தை அழிக்கும் சத்தம் கேட்டதும்அத்தோட்டத்தில் இருந்த இரு முதியவர்களும்மிகவும் தெய்வாதீனமாக உயிர் பிழைத்து அங்கிருந்துஒருவாறு வெளியேறியுள்ளனர்.

மிக நீண்டகாலமாகவிருந்து காலத்திற்குக் காலம்இவ்வாறு காட்டு யானைகளின் தாக்குதல்களையும்அழிவுகளையும் எதிர் கொண்டுவரும் தமக்குஇதிலிருந்து நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டுமாகஇருந்தால் தமது பகுதியில் நிலைகொண்டுள்ளகாட்டுயானைகளைப் பிடித்துக் கொண்டு யானைகள்சரணாலயத்தில் விடவேண்டும்அதபோல் மீண்டும்யானைகள் கிராமங்களுக்குள்ளும்வயல்வெளிகளுக்குள்ளும் வராமலிருக்க எல்லைப்புறத்தில் யானைப் பாதுகாப்பு வேலிகளை அமைக்கவேண்டும்என அப்பகுதி மக்கள் தெரிவிப்பதோடுமின்சாரம் இல்லாத தமது தோட்டங்களுக்கும்எல்லைப் பகுதிகளுக்கும்மின்சார வசதிகளையும்ஏற்படுத்திதி யானை சுமார் 15 வருடங்கள் பழமைவாய்ந்த பலன்தரும் தென்னைகளிக் அழிவுக்குஇழப்பீட்டையும் பெற்றுத்தர சம்மந்தப்பட்டஅதிகாரிகள் துரிதகதியில் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப்பகுதியில் காட்டுயானைகளின் அட்டகாசங்கள் மிகநீண்டகாலமாகவிருந்து அதிகரித்துள்ளமைகுறிப்பிடத்தக்கதாகும்.

புதியது பழையவை