மட்டக்களப்பு நகரில் 19.03.2021 காலை நடாத்தப்படவிருந்த சாத்வீகமுறையிலான கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு தடையுத்தரவு




மட்டக்களப்பு நகரில் 19.03.2021 அன்று காலை நடாத்தப்படவிருந்த சாத்வீகமுறையிலான கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு தடையுத்தரவு


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் அவர்களுக்கு வாழைச்சேனை போலீசாரினால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தடையுத்தரவு 18.03.2021 பிற்பகல் 5.45 மணியளவில் கையளிக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை போலீஸ் பொறுப்பதிகாரி குழுவினர் வருகைதந்து அவருக்கு அதனைக் கையளித்தனர். அதற்கான புகைப்படங்களையும், காணொலிகளையும் எடுத்துக்கொண்டனர். அத்தோடு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் AR/233/2021 இலக்க வழக்கின் குற்றவியல் நடைமுறைப்படி சட்டக்கோவைப் பிரிவு 106 (1) இன் கீழான தடையுத்தரவாக இதனைப் பிறப்பித்திருக்கின்றார். அதாவது நாளை மட்டக்களப்பு நகரில் நடைபெற இருந்த சாத்வீகமுறையிலான கவனயீர்ப்புப் போராட்டம் தடைசெய்வதற்காக இவ்வேற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதேநேரம் சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்களோடு இன்னும் பலருக்கு இதில் பங்குபற்ற தடையுத்தரவு நீதவான் நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தால் இந்தத் தடையுத்தரவை இன்று மட்டக்களப்பு தலைமை போலீஸ் பொறுப்பதிகாரி வீ.கோ.ப. கெட்டியாராய்ச்சி அவர்கள் பெற்றிருக்கின்றார். இதேபோல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்புகள், அரசியல் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலருக்கு இந்தத் தடையுத்தரவுகள் இன்று வழங்கப்படுகின்றன. உண்மையில் நாளை நடைபெற இருந்த இந்த சாத்வீகமுறையிலான கவனயீர்ப்புப் போராட்டத்தை நிறுத்துமாறு கோரியுள்ளனர். இதிலே முக்கியமாக அவர்கள் குறிப்பிடுவது யாதெனில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதன் காரணமாக இலங்கை அரசுக்கு சர்வதேச ரீதியாக அபகீர்த்தியையும், அவமானத்தையும் ஏற்படுத்தக்கூடியதாக இந் நிகழ்வாக இருக்கும் என்றும், கூடுதலான நபர்கள் ஒன்றுகூடுவதனால் கொரோணா வைரஸ் பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும், அதேநேரத்தில் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் உத்தேசித்து தாங்கள் தடையுத்தரவை கோருவதாக போலீசாரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


ஆகவே, குறித்த சாத்வீகமுறையிலான கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு தடையுத்தரவை மட்டக்களப்பு தலைமை போலீஸ் பொறுப்பதிகாரி, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் முலம் பெற்று வழங்கியுள்ளார். இவ்வுத்தரவு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் அவர்களின் வீட்டிற்கும் சென்று கையளிக்கப்பட்டுள்ளது.

புதியது பழையவை