ஒரு சமூக மாற்றத்தில் அரசியல் பங்களிப்பு என்பது மிகவும் பிரதானமானது என்று தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் நாடாளுமன்ற உறுப்பனராக இருந்த யோகேஸ்வரன் ஐயாவின் சொந்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
