பண்டாரவளை – பூனாகலை பிரதான வீதியைப் புனரமைத்துத் தருமாறு கோரி பிரதேச மக்கள் இன்றுகாலை வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தூல்கொல்லையிலிருந்து பண்டாரவளை நகரத்தை நோக்கிச் சென்று தமது கோரிக்கைளை முன்வைத்து போராட்டத்தை மேற்கொண்டனர்.