அண்மையில் கா.பொ.த.(சா.த)ப் பரீட்சை எழுதி விட்டு பேறுபேற்றுக்கு காத்திருந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காக்காச்சிவட்டை மண்டூர் பிரதேசத்தைச் சேர்ந்த (17) வயதுடைய மாணவி சிவகுமார்-கேமலா என்பவர் நேற்று மாலை (29) தனது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டின் அறையினுள் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்த நிலையில் அயலவர்களின் உதவியுடன் தூக்கில் இருந்து மீட்டு களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
களுவாஞ்சிகுடி சுற்றுலா பதில் நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனையின் பின்னர் பிரேதத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
