மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்து.


திருகோணமலை-கண்டி பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் கார் மோதியதில் மோட்டார் சைக்கிள் சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (30) காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த கார் ஐந்தாம் கட்டை பகுதியில் வீதி ஓரத்தில் நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.


இவ்விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான திருகோணமலை கப்பல்துறை பகுதியை சேர்ந்த கே அந்தோணிசாமி (48 வயது)உயிரிழந்துள்ளதாகவும் சீனக்குடா பொலிசார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் காரில் சாரதியை கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சீனக்குடா போலீசார் தெரிவித்தனர்.
புதியது பழையவை