கருணா அம்மான் என்ற பெயர் சும்மா வரவில்லை.


இந்த நாட்டைத் தளம்பல் இல்லாமல் வழிநடத்துகின்ற ஒரு ஜனாதிபதி. அதற்கு ஒரு அத்திவாரமாக எமது பிரதமர் இருக்கின்றார். நமது நாட்டில் சிறந்ததொரு நிருவாகக் கட்டமைப்பு தற்போது உருவாகியிருக்கின்றது. அதனைச் சிலர் விமர்சிக்காலம் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் தரமுயர்வு தொடர்பில் நாங்கள் தொடர்ந்து பல வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றோம். ஜனாதிபதி, பிரதமர், துறைசார்ந்த அமைச்சர் உட்பட அனைவரிடமும் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம். அதேபோல் கிட்டங்கிப் பாலம் உட்பட பல பாலங்கள் தொடர்பிலும் கதைத்துள்ளோம். பாராளுமன்றத் தேர்தலின் போது அம்பாறை மாவட்டத்திற்கு நாங்கள் என்னென்ன வாக்குறுதிகளைக் கொடுத்தோமோ சொன்ன விடயங்கள் அனைத்தும் நடக்கும்.

எமது கட்சியை நாங்கள் பாரிய சக்தியாக வளர்த்தெடுக்க வேண்டும். இதற்கான வேலைகளை இலகுவாக்குவதற்கு நிருவாகத்தினைப் பிரித்துக் கொடுத்துள்ளோம். அத்துடன் எமது கட்சிக்கான ஒழுக்கம் மிகவும் முக்கியம். கருணா அம்மான் என்ற பெயர் சும்மா வரவில்லை. எத்தனை போராட்டங்கள் எத்தனை தியாகங்கள் எத்தனை இழப்புகளைக் கடந்து வந்துள்ளோம். அதனை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும்

புதியது பழையவை