யாழ் மாவட்ட தனியார் தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் புலேந்திரன் சுலக்ஷன் அவர்களை இன்றைய தினம் பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் அழைக்கப்பட்டு மூன்று மணிநேர வாக்குமூலம் பெறப்பட்டதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன் பிரகாரம் முக நூலில் ஒன்றில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் படங்களை பதிவு செய்த நபரின் நண்பராக இருந்தமை தொடர்பாக இவ்விசாரணை இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றார்கள்.
